உலக அதிசயங்களுள் அழகு.


பிறப்பு, இறப்பு 
வாழ்தல், வீழ்தல் 
உண்ணல், உறங்கல் 
அனைத்தும் அதிசயம் 

சாய்ந்து நிற்கும் பைசா ஓர் அதிசயம் 
உடைந்திருக்கும் கொலோசியம் ஓர் அதிசயம் 
சாய்ந்து, உடைந்து, நெளிந்து, வளைந்து 
நீண்டு நிற்கும்  அனைத்தும் அதிசயம் 

இலங்கை சீகிரியா, ஒரு 
அரும் பெரும் கோட்டை 
கலை வளர்த்த கோட்டை - இன்று 
மாந்தர் கட்டி மகிழ்ந்தனரோ 

சோழ தஞ்சை பெரிய கோவில் 
தமிழ் வரலாறு சுட்டும் கோவில் 
இத்தனை அதிசயம் உலகில் இனி 
அமைக்கும் சக்தி எங்கும் உளதோ. 

உயிர் தரும் மூச்சு அதிசயம் 
பசியாற்றும் உணவும் அதிசயம் 
கனவு தரும் உறக்கம் அதிசயம் 
வெற்றி தரும் கல்வி அதிசயம் 
காலை விரியும் பூக்கள் அதிசயம் 
தேடி வரும் வண்டும் அதிசயம் 
மலையுணரும் பூச்சிகள் அதிசயம் - அதன் 
கூட ஒளிரும் விளக்கும் அதிசயம் 
இயற்கையே!

அற்புதங்கள் கோர்த்தெடுத்த 
அதிசயச் சுரங்கம் நீ…..
பார்க்க, நுகர, கேட்க தெவிட்டாத 
அதிசய பேழை நீ…..

ஆனால்,
மானுடம் சமைத்த அதிசயங்கள் 
ஒருசில தான்.

Comments

  1. இவ்வளவு கவிதைகளை எழுதிக் குவிக்கும் வல்லமை படைத்த பெண்ணே நீயும் ஓர் அதிசயமே 💫🙌🏻

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வர்ணங்கள்

அலைகள்

நான் ஒரு அப்பா...