அலைகள்


இத்தனை யுகங்களாய் 

இந்த அலைகள், கரைகளோடு 

அப்படி என்ன தான் பேசுமோ?


இப் பொறுப்பற்ற மாந்தர் தம் 

செயல் கண்டு அவை கண்ணீர் விடத்தானோ 

இல்லை,

தம் இலக்கு நோக்கிய கேள்வியுடன் தானோ 


எங்கோ பிறந்து 

எங்கிருந்தோ விரைந்து 

இன்று, இக் கரைகளோடு 

பேசிமகிழ்கின்றன, அலைகள் 


இத்தனை காலமாய், 

தம் உடன் பிறந்த நீரினங்களை அழைத்து,

ஒரே திசையில் 

உழைக்கின்றன அலைகள் 


கடல்களின் வசீகரம் அலைகள்,

பலவற்றை கற்பிக்கின்றன அலைகள்.

Comments

  1. ஓர் மெய்சிலிர்க வைக்கும் கவிதை💫. உங்களது எண்ணங்கள் மென்மேலும் அலைகடல் போல் பரந்து விரிந்து பற்பல கவிதைகளைப் பொழிய வாழ்த்துக்கள்🙌🏻

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்துக்களை ரசித்திடும் எனதருமை நண்பியே! தொடர்ந்தும் உன் ஆதரவு தந்திடுவாய். நன்றி.

      Delete

Post a Comment

Popular posts from this blog

வர்ணங்கள்

நான் ஒரு அப்பா...