வர்ணங்கள்

பிரம்மன் படைப்பில் 

சிறந்தன வர்ணங்கள்

 

வான்  நீலம் கொண்டு 

தன்னிறம்  மாற்றி 

கடல் கொள்கிறது நீலம் 


சிறிதே பச்சை சேர்த்து 

சமைக்கின்றன இலைகள் 

மூலங்கள் சேர்க்கை 

எத்தனை ஜாலமோ 


நிறங்கள் சேர்க்கையில் - சற்றே 

கோபம் கொண்ட இறைவன் 

முள்ளோடு சேர்த்து 

சிவப்பைப் படைத்து 

முள்ளைக்கிள்ளி கறுப்பில் படைத்து - அக் 

கறுப்பும் சற்றே வெள்ளையுறக் கண்டவன் 

சிறிதே பொன் தூவி 

வாழ்த்தி அதனை 

தலைதன் உச்சியில் 

பிரதிஷ்டை செய்து


சற்றுக்கீழே இரு அணைகள் அமைத்து 

இடையே இரு குளங்கள் கட்டி - அவை 

பலவர்ண நிறங்களில் 

ஜொலிக்கக்கண்டவன் - அவனே 

பிரமித்துப் போனான் பிரம்மதேவன் 


பெண்களை படைத்து 

கோலத்தில் வர்ணமிட்டான் 

மழலையைப் படைத்து 

உலகிற்கே  நிறமளித்தான் 


வர்ணங்கள் வாழீ

Comments

  1. பிரம்மன் படைத்த படைப்புக்களைப் போன்று தங்களது படைப்பும் அருமைய்க உள்ளது💫

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி! என்றும் உனது முதல் விமர்சனம் தொடர வேண்டும். நன்றி!
      Thanks a lot for supporting me this much Nivea! Enjoy :)

      Delete

Post a Comment

Popular posts from this blog

அலைகள்

நான் ஒரு அப்பா...