நிலா

இருட்டின் ஒளி நாயகன்

பாலை ஒத்த நிறமவன்

குன்றும் குழியும் நிறைந்தவன் - எனினும்

என்றும் ரசிக்கத் தகுந்தவன்


நான் செல்லும் பாதையெங்கும் 

என் கைவிரல் கோர்த்து

மரக்கிளையில் ஒழிந்து மறைந்து

விளையாடிவரும் ஒரு இனிய தோழன்


நீ சற்றே நீர் சுரந்தால் - மற்றும்

வாழ்க்கைத் தேவைகளை நிவர்த்தி செய்தால்

உன் மடியிலே தவழத் துடிக்கிறோம்

விஞ்ஞானம் வளர்த்த பூலோகவாசியினர்


தூரத்தில் இருந்தால் ரசிக்கும் மாந்தர்

உன்னிடம் வந்தால் மறப்பார் என்றோ

அஞ்சுகிறாய், பால் நிலவே


மழலையில் தாயாய்

வளர்கையில் தோழனாய் - பதின்ம

வயதினில் காதலனாய் - பின்

என்றும் பிரியா வாழ்க்கைத்துணையாய்


என் வாழ்க்கைப் பக்கங்கள் முழுவதிலும் நீயே

தேய்ந்து வளர்ந்து நிறைகிறாயே!

Comments

Popular posts from this blog

வர்ணங்கள்

அலைகள்

நான் ஒரு அப்பா...