Posts

Showing posts from June, 2023

நான் ஒரு அப்பா...

Image
இன்று போல் உள்ளது அன்று, கண் திறக்ககூட தென்பில்லாமல் அழுகை தவிர வேறேதும் அறியாமல் ஐந்து வினாடி முன் பூத்த பூவாய் என் நெஞ்சில் பிஞ்சுப்பாதம் பதிய   என்ன இதழ்கள் அவை, செங்கமலமே பொறாமைப்படும்   கண்கள், கண்களே அல்ல, தேன் குவளைப் பூக்கள்   கொள்ளை அழகு கொள்ளை அழகு கண் பிரித்திட முடியா கொள்ளை அழகு   அழுகையும் மகிழ்ச்சியும் ஒரே விகிதத்தில் பொத்துக்கொண்டு கண்ணீர் மட்டுமே ஒரே மொழியாய்   சிறிதின் பின்,   பிஞ்சுக்கரம் கொண்டு என்னை அழைத்து நச்செனக் கொடுப்பாள் ஒரு முத்தம் என் நாடிநாளம் கடந்து உயிர்நாடி தொடும் அதன் உஷ்ணம்   பொய்யாய்க் கோபம் கொண்டு உன்மையில் அழுகையில் அவளின் கன்னம் என் கரத்தில் விழிநீர் களைந்து எறிவேன் கணத்தில்   பள்ளியில் அவள் தன் நண்பர்கள் காண்கையில் அவர்களோடு இவள் தன் கூடல் காண்கையில் சிறிதே கொள்கிறேன் துன்பம் - அவள் எனைப்பிரிவாளோ எனும் அச்சம்   அதோ போகிறாள் தன் கனவு நோக்கி என் கரம் பிரித்து விமானத்தின் பிடியில்   ஏதோவொரு சுனாமிக்கான ஆயத்தம் என் நெஞ்சில்   இதோ வருகிறாள் அன்று பறந்தவள்

நிலா

Image
இருட்டின் ஒளி நாயகன் பாலை ஒத்த நிறமவன் குன்றும் குழியும் நிறைந்தவன் - எனினும் என்றும் ரசிக்கத் தகுந்தவன் நான் செல்லும் பாதையெங்கும்  என் கைவிரல் கோர்த்து மரக்கிளையில் ஒழிந்து மறைந்து விளையாடிவரும் ஒரு இனிய தோழன் நீ சற்றே நீர் சுரந்தால் - மற்றும் வாழ்க்கைத் தேவைகளை நிவர்த்தி செய்தால் உன் மடியிலே தவழத் துடிக்கிறோம் விஞ்ஞானம் வளர்த்த பூலோகவாசியினர் தூரத்தில் இருந்தால் ரசிக்கும் மாந்தர் உன்னிடம் வந்தால் மறப்பார் என்றோ அஞ்சுகிறாய், பால் நிலவே மழலையில் தாயாய் வளர்கையில் தோழனாய் - பதின்ம வயதினில் காதலனாய் - பின் என்றும் பிரியா வாழ்க்கைத்துணையாய் என் வாழ்க்கைப் பக்கங்கள் முழுவதிலும் நீயே தேய்ந்து வளர்ந்து நிறைகிறாயே!

வர்ணங்கள்

Image
பிரம்மன் படைப்பில்  சிறந்தன வர்ணங்கள்   வான்  நீலம் கொண்டு  தன்னிறம்  மாற்றி  கடல் கொள்கிறது நீலம்  சிறிதே பச்சை சேர்த்து  சமைக்கின்றன இலைகள்  மூலங்கள் சேர்க்கை  எத்தனை ஜாலமோ  நிறங்கள் சேர்க்கையில் - சற்றே  கோபம் கொண்ட இறைவன்  முள்ளோடு சேர்த்து  சிவப்பைப் படைத்து  முள்ளைக்கிள்ளி கறுப்பில் படைத்து - அக்  கறுப்பும் சற்றே வெள்ளையுறக் கண்டவன்  சிறிதே பொன் தூவி  வாழ்த்தி அதனை  தலைதன் உச்சியில்  பிரதிஷ்டை செய்து சற்றுக்கீழே இரு அணைகள் அமைத்து  இடையே இரு குளங்கள் கட்டி - அவை  பலவர்ண நிறங்களில்  ஜொலிக்கக்கண்டவன் - அவனே  பிரமித்துப் போனான் பிரம்மதேவன்  பெண்களை படைத்து  கோலத்தில் வர்ணமிட்டான்  மழலையைப் படைத்து  உலகிற்கே  நிறமளித்தான்  வர்ணங்கள் வாழீ