Posts

Showing posts from April, 2021

அன்னை

Image
பத்துத் திங்கள் தன்னில் சுமந்து  உலகை அறிவித்தவள்   உண்டி கொடுத்து பராமரித்து  மகிழ்ச்சி அடைகின்றவள்  வண்ண வண்ண உடை உடுத்தி  அழகு சேர்க்கின்றவள்  பள்ளி கூட்டி சென்று பாடம்  பயிற்றுவித்தவள்  பள்ளிக்கூடம் முடிய அதிக  நேரம் சென்றாலும்  சலித்திடாமல் சூடு தாங்கி  கூட்டிச் செல்பவள்  நோய்நொடிகள் பக்கம் வந்தால்  அஞ்சிப் போபவள்  பசிஉறக்கம் பாராதென்னை  கவனித்திருப்பவள்  அன்னை பாதம் நிதம் பணிந்து அவள் மனம் போல அன்புடனே அருகிருப்போம்  அவள் காலமெல்லாம்.